TNPSC Thervupettagam

இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி

May 12 , 2024 195 days 241 0
  • முந்தைய நிதியாண்டில் 153.89 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் பொம்மை ஏற்றுமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 152.34 மில்லியன் டாலராக குறைந்து உள்ளது.
  • 2020 ஆம் நிதியாண்டு முதல் 2022 ஆம் நிதியாண்டு வரை, 129.6 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த பொம்மை ஏற்றுமதி 177 மில்லியன் அமெரிக்க டாலராக மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
  • இருப்பினும் 2024 ஆம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி சுமார் 152.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 62.37 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதியானது, 2023-24 ஆம் ஆண்டில் 64.92 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகச் சந்தையில் சுமார் 60.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொம்மைகளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • 22.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொம்மைகளை மட்டும் கொள்முதல் செய்த அமெரிக்கா, பொம்மைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் (9 பில்லியன் டாலர்), ஜப்பான் (2.8 பில்லியன் டாலர்), கனடா (1.6 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்