சர்வதேச நாணய நிதியமானது 2022-23 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்ட நிலையை 7.4% ஆகக் குறைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கான கண்ணோட்ட நிலை 0.8 சதவிகிதம் குறைக்கப் பட்டு உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய இந்தக் கணிப்பானது, 2023 ஆம் நிதி ஆண்டிற்கான அதன் முந்தைய மதிப்பீடான 8.2 சதவீதத்தினை விட மிகவும் குறைவாக உள்ளது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய மதிப்பீடான 7.2% என்ற வளர்ச்சி விகிதத்தை விட இது அதிகமாகும்.
சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில், 2023-24 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.1% என்ற அளவு வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.