TNPSC Thervupettagam

இந்தியாவின் பொலிவுறு நகர விருது

June 24 , 2018 2248 days 645 0
  • 25 ஜூன் 2017 அன்று இந்தியாவின் பொலிவுறு நகரங்களுக்கான விருதுகள் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது நகரங்களின் திட்டங்கள் மற்றும் புதிய கண்ணோட்டம் கொண்ட கருத்துகளுக்கு வெகுமதியை வழங்குவதும், நகரங்களில் வளர்ச்சிக் குன்றா மேம்பாட்டினை ஊக்குவிப்பதும் ஆகும்.
  • இந்த விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன.
  1. புதிய கண்ணோட்டம் கொண்ட கருத்துகளுக்கான விருது
  2. நகரங்களுக்கான விருது
  3. திட்டங்களுக்கான விருது

புதிய கண்ணோட்டம் கொண்ட கருத்துகளுக்கான விருது

  • போபால் மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு நகரங்களும் இந்தப் பிரிவிற்கான கூட்டு வெற்றியாளர்கள் ஆவர். போபால் நகரம், ஒருங்கிணைந்த ஆணை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்காகவும் (ICCC-Integrated Commond & Control Centre) அகமதாபாத் நகரம் அதன் பாதுகாப்புத் திட்டத்திற்காகவும் (SASA-Safe and Secure) இவ்விருதுகளைப் பெறுகின்றன.

நகரங்களுக்கான விருது

  • திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்த உத்வேகம் காட்டுவதற்காகவும், குறிப்பாக நகர்ப்புறச் சூழல், போக்குவரத்து மற்றும் இயக்கம், மற்றும் வளர்ச்சிக் குன்றா மேம்பாட்டில் உத்வேகம் காட்டுவதற்காகவும் சூரத் நகரத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

திட்டங்களுக்கான விருது

  • இந்த விருது ஏப்ரல் 1, 2018-ல் முடிவடைந்த ஏழுப் பிரிவுகளை சேர்ந்த சிறந்த புதிய கண்ணோட்டம் கொண்ட மற்றும் வெற்றியடைந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டத் திட்டங்களாவன

  1. பூனாவின் ”ஆட்சி” பிரிவின் கீழ் வரும் நகராண்மைக் கழகப் பாதுகாப்புத் திட்டம் (PMC-Care).
  2. பூனாவின் சுற்றுச்சூழல் கட்டமைப்பின் கீழ்வரும் பொலிவுறு இடத்தினை உருவாக்கும் திட்டம்.
  3. புதுதில்லி மற்றும் ஜபல்பூரின் பொலிவுறு வகுப்பறை, விசாகப்பட்டினத்தின் பொலிவுறு வளாகம், பூனாவின் “சமூக அம்சங்கள் கீழ்வரும் கலங்கரை விளக்கம்”.
  4. (B-Nest) பி-னெஸ்ட் நோயரும்பு மையம்-போபால் மற்றும் “கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம்” பிரிவின் கீழ் வரும் ஜெய்ப்பூரின் ராஜஸ்தான் கலைப்பள்ளி பாதுகாப்பு.
  5. போபால், பூனா மற்றும் கோயம்புத்தூரின் பொது வாகன பங்கீடு மற்றும் “நகர சூழல்” பிரிவின் கீழ் வரும் ஜபல்பூரின் கழிவுகளை ஆற்றல் ஆலைகளுக்கு வழங்குதல் திட்டம்.
  6. அகமதாபாத் மற்றும் சூரத்தின் “போக்குவரத்து மற்றும் இயக்கம்” என்ற பிரிவின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்தப் போக்குவரத்து மேலாண்மை முறை (TMS-Integrated Transit Management System).
  7. அகமதாபாத்தின் “தண்ணீர் மற்றும் துப்புரவு” பிரிவின் கீழ்வரும் SCADA (SCADA-Supervisory Control & Data Acquisition) மூலம் இயங்கும் தண்ணீர் மேலாண்மை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்