பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆனது 'பாரத் ரன்பூமி தரிசனம்' எனப்படும் தனது ஒரு புதிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, அதன் வரலாற்று மற்றும் பயன்பாட்டில் உள்ள சில போர்க்களங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல் மண்டலங்களுக்குச் சுற்றுலாப் பார்வையாளர்கள் வருகை தருவதற்கு அனுமதியளித்துள்ளது.
இந்த முக்கிய முன்னெடுப்பானது அதன் சிறப்பு மிக்க மற்றும் அணுக முடியாத போர் மண்டலங்களுள் சிலவற்றைச் சுற்றுலாத் தலங்களாக மாற்ற உள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட்ட 'பாரத் ரன்பூமி தரிசனம்' முன்னெடுப்பில் கல்வான் மற்றும் டோக்லாம் மற்றும் கடந்த காலங்களில் சில இராணுவ நடவடிக்கைகள் நிகழ்ந்த 75 பிற தளங்கள் அடங்கும்.
இந்திய இராணுவமானது சுற்றுலாத் துறை அமைச்சகத்துடன் இணைந்து "போர்க்கள சுற்றுலாவிற்காக" இந்த போர்க்களத் தளங்களைப் பட்டியலிட்டுள்ளன.