TNPSC Thervupettagam

இந்தியாவின் மந்தாரைகள்

July 16 , 2019 1961 days 711 0
  • “இந்தியாவின் மந்தாரைகள் : படங்களைக் கொண்ட வழிகாட்டி“ என்பதானது இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தினால் (BSI - Botanical Survey of India) சமீபத்தில் பிரசுரிக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் உள்ள மந்தாரைகளின் முதலாவது விரிவான கணக்கெடுப்பாகும்.
  • 1256 மந்தாரை இனங்களின் வாழிடமாக இந்தியா திகழ்கின்றது. அவற்றில் 388 வகை மந்தாரை இனங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
  • 128 வகை மந்தாரை இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன.
  • இவை வடகிழக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.
  • மந்தாரைகள் சிக்கலான மலர் அமைப்பைக் கொண்டுள்ளன. இது உயிரியல்சார் மலர்களுக்கிடையேயான மகரந்தச் சேர்க்கைக்கு வழி செய்கின்றது. இது மற்ற தாவரக் குழுக்களை விட பரிணாம ரீதியாக உயர்ந்ததாக மந்தாரைகளை ஆக்குகின்றது.
  • ஒட்டுமொத்த மந்தாரைக் குடும்பமும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகிவரும் இனங்கள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) இணைப்பு – IIல் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • காடுகளில் உள்ள மந்தாரைகளின் வர்த்தகம் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்