TNPSC Thervupettagam

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 2024

April 30 , 2024 211 days 245 0
  • இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியானது ஆண்டிற்கு ஆண்டு 9.67 சதவீதம் அதிகரித்து 2023-24 ஆம் ஆண்டில் 27.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • ஆனால், கடந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்துள்ளது.
  • மார்ச் மாதத்தில் பதிவான மருந்து ஏற்றுமதி 12.73 சதவீதம் அதிகரித்து, 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்ற நிலையில் 2022-23 ஆம் ஆண்டில், மருந்து ஏற்றுமதி 25.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகியாவை கடந்த நிதியாண்டில் இந்தத் துறையில் முன்னணியில் இருந்த முதல் ஐந்து ஏற்றுமதிச் சந்தைகள் ஆகும்.
  • அமெரிக்க நாடானது இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 31 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு மற்றும் நெதர்லாந்து (தலா 3 சதவீதம்) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்