TNPSC Thervupettagam

இந்தியாவின் மாநில அளவிலான நோய்ப் பிரச்சினை முன்னெடுப்பு

January 1 , 2021 1299 days 703 0
  • இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்திய பொது சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார அளவுகள் & மதிப்பீடுகளுக்கான மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
  • இந்த அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடானது 1.7 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இந்தியர்களைக் கொன்றுள்ளது.
  • இது நாட்டில் நிகழும் மொத்த இறப்புகளில் 18% இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • கடந்த 20 ஆண்டுகளில் (1990-2019) வீட்டிற்குள்ளே ஏற்படும் காற்று மாசுபாடானது 64% அளவிற்கு குறைவான இறப்புகளுக்கு வழி வகுத்துள்ளது.
  • ஆனால் திறந்தவெளிக் காற்று மாசுபாட்டின் மூலம் ஏற்படும் இறப்பானது இந்தக் காலக்கட்டத்தில் 115% என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • இதில் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் நுரையீரல் நோய்ப் பாதிப்பானது அதிகப் பங்கைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவானது காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் முதிரா இறப்புகளின் காரணமாக 1.4% அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ரூ.2,60,000 கோடி) இழந்துள்ளது.
  • காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பானது ஒரு  மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தின் அடிப்படையில் மத்திய இந்திய மாநிலங்கள் மற்றும் வட இந்திய மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
  • இவை உத்தரப் பிரதேசம் (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 2.2%) மற்றும் பீகார் (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில்  2%) ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் தில்லியானது காற்று மாசுபாட்டின் காரணமாக அதிகமான தலா தனிநபர் பொருளாதார இழப்பைப் பதிவு செய்துள்ளது, இதற்கு அடுத்த இடத்தில் ஹரியானா மாநிலம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்