இந்தியாவின் மிக உயர்ந்த மூவர்ணக் கொடியை மும்பையில் உள்ள புகழ்பெற்ற மெஜஸ்டிக் ஹஜ் மாளிகையின் மேல்தளத்தில் மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றி வைத்தார்.
இந்த தேசியக் கொடியானது 20x30 அடி அளவுடையது. தரைமட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் இது பறக்க விடப்பட்டது.
இந்தக் கொடியானது தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையத்தின் அருகில் உள்ள புகழ்பெற்ற கட்டிடத்தின் உச்சியில் 20 மீட்டர் உயரக் கம்பத்தில் ஏற்றப்பட்டது.
இது நாட்டில் இதுவரையல்லாத அளவில் உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் அதிக உயரத்தில் ஏற்றப்பட்ட மிக உயர்ந்த மூவர்ணக்கொடியாகும்.