இந்தியாவின் மின்னணு சாதனம் சார்ந்த விளையாட்டுகள் குறித்த அறிக்கை 2024
April 8 , 2024 234 days 216 0
2023 ஆம் ஆண்டில் சுமார் 568 மில்லியன் அளவிலான மின்னணு சாதனம் சார்ந்த விளையாட்டுப் பயனர் எண்ணிக்கையையும், சுமார் 9.5 பில்லியனுக்கும் அதிகமான விளையாட்டுச் செயலிப் பதிவிறக்கங்கள் எண்ணிக்கையையும் கொண்டு இந்திய நாடானது உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனம் சார்ந்த ஒரு பெரிய விளையாட்டுச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
உலகின் மொத்த கைபேசி விளையாட்டுச் செயலிப் பதிவிறக்கங்களில் இந்தியாவின் பங்கு தோராயமாக 20% ஆகும்.
இது அடுத்த இரண்டு இடங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளின் மொத்தப் பதிவிறக்க கூடுதலை விட அதிகமாக உள்ளது.
இந்தத் துறையானது 14 சதவீதம் என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் மின்னணு சாதனம் சார்ந்த விளையாட்டுகளின் சந்தையில், 90 சதவீதம் கைபேசி சார்ந்த விளையாட்டுகள் பங்களிக்கிற நிலையில் இது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் முறையே 37% மற்றும் 62% ஆக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் 3.1 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் மின்னணு சாதனம் சார்ந்த விளையாட்டுகள் சார்ந்த தொழில் துறையானது 2028 ஆம் ஆண்டில் சுமார் இரு மடங்காக உயர்ந்து 6 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.