சீனாவானது 2020 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் முதன்மை வர்த்தகப் பங்காளர் நாடாக உருவெடுத்துள்ளது.
இதற்குக் காரணம் சீனாவிடமிருந்து கனரக இயந்திரங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதாகும்.
தற்காலிகத் தரவின் படி, 2020 ஆம் ஆண்டில் இந்த 2 நாடுகளுக்கிடையேயான வர்த்தகமானது 77.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
எனினும், 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட வர்த்தகத்துடன் ஒப்பிடப் படும் போது தற்போதைய வர்த்தகமானது குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இது 85.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக இடைவெளி 40 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.