- ஐஐடி மதராசைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கூடிய “சக்தி” என்ற நுண்செயலியை வடிவமைத்துள்ளனர்.
- இது
- தொழிலகம் சார்ந்த நுண்செயலிகள் மற்றும் நுண்செயலி சார்ந்த இதர பொருட்களின் வளர்ச்சி
- இறக்குமதியாகும் நுண்சில்லுகள் சார்ந்திருத்தலைக் குறைத்தல் மற்றும் இணைய வழிக் குற்றங்களைக் குறைத்தல்
ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (Ministry of Electronics and Information Technology - MeitY) பாதியளவு நிதி அளிக்கும் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதன் வடிவமைப்பு RISC-V (Reduced Instruction Set Computer/ குறைக்கப்பட்ட அறிவுரைகளைக் கொண்ட கணினி) என்றழைக்கப்படும் அடிப்படை அறிவுரைகளின் தொகுப்பான திறந்தவெளி அறிவுரைகள் ஒருங்கு அமைப்பிலிருந்து உருவானது. RISC-V என்பது எந்தவொரு சாதனத்திற்கும் அதன் தனிப் பயனாக்கத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- IIT மதராஸ் ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது மீத்திறன் கணினிக்கான மேம்படுத்தப்பட்ட நுண்செயலியான “பராசக்தி” குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.