TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது குவியத் திட்டம் (ஒருங்கிணைக்கப் பட்டது)

November 21 , 2020 1340 days 573 0
  • வேளாண் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக இந்தியாவின் முதலாவது குவியத் திட்டமானது கோவாவில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தத் திட்டமானது காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகிய மூன்றும் ஒன்று சேர்க்கப் பட்ட கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டு அதிகரித்து வரும் ஆற்றல் தீர்வுகளின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கார்பன் நீக்கத்திற்கு வழிவகுக்கும் தீர்வுகளை வழங்கும் வகையில் எல்இடி விளக்குகள், சூரிய ஒளி ஆற்றல் மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்ற துறைகளை இணைப்பதாகும்.
  • அமைப்புசார், சமூகம், நிறுவனம் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்படும் திட்டங்கள் குவியத் திட்டங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
  • இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் 40 ஜிகாவாட் என்ற அளவில் மேற்கூரை சூரிய ஒளி உற்பத்தி ஆற்றல் பொருத்தப்படுவதற்கான ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் என்ற அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைவது என்ற ஒரு முதன்மை இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள 36.17% நிறுவப்பட்ட மின்சார உற்பத்தியானது புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்துப் பெறப் பட்டதாகும்.
  • இந்தியாவின் தேசிய அளவிலான நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கு என்பது புதைபடிவம் அல்லாத எரிபொருளிலிருந்து 40% என்ற அளவிற்கு மொத்த மின்சார உற்பத்தியை 2030 ஆம் ஆண்டில் அடைவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்