இந்தியாவின் முதலாவது சிறந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பு
October 18 , 2019 1921 days 805 0
தமிழ்நாடு அரசானது சென்னையில் ஒரு ‘சிறந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பை’ ஏற்படுத்த இருக்கின்றது.
இது மழைக் காலங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ள பகுதிகளின் விவரங்களைப் பெற அதிகாரிகளுக்கு உதவ இருக்கின்றது.
சிறந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பைப் பெற்ற இந்தியாவின் முதலாவது நகரமாக சென்னை உருவெடுக்க இருக்கின்றது.
CFLOWS
CFLOWS எனப்படும் தொழில்நுட்பமானது இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு ஆகும்.
CFLOWS என்பது வலைதளப் புவியியல் தகவல் முறைமை அடிப்படையிலான தீர்வுகளை அளிக்கும் ஒரு ஆதரவு அமைப்பு ஆகும்.
இது வானிலை முன்னறிவிப்பு, ஹைட்ரோலஜிக் (நீரியல்), ஹைட்ராலிக் மற்றும் நீரியக்கவியல் மாதிரிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் முடிவுகளை ஒருங்கிணைக்கின்றது.
உள்கட்டமைப்புகள், கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வார்டு எல்லை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தின் முப்பரிமாண காட்சிகள் உட்பட 6 கூறுகள் இதில் உள்ளன.
இது 10 நாட்களுக்கு முன்பே சாத்தியமான நீரில் மூழ்கும் பகுதிகள் பற்றிய முன்னறிவிப்பை வழங்கும்.
இதனுடன் தொடர்புள்ள அமைப்புகள்
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
முழுமையாக செயல்படும் CFLOWSற்கான இணைப்பானது தேசியக் கடலோர ஆராய்ச்சி மையத்தினால் (National Centre for Coastal Research - NCCR) மாநில பேரிடர் மேலாண்மை கழகத்திற்கு முறையாக ஒப்படைக்கப்பட இருக்கின்றது.