TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் திறன் மையம்

September 21 , 2019 1894 days 726 0
  • இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் திறன் மையத்தை (Digital Capability Centre - DCC) அமைக்க இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய நிறுவனமானது (National Institution for Transforming India - NITI Aayog) மெக்கின்சி & நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இது மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் காண்பிக்கும். இது வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு சோதனைத் தளத்தை வழங்கும்.
  • DCC என்பது ஒரு தனித்துவமான டிஜிட்டல் உற்பத்திக் கற்றல் மையமாகும்.
  • இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் தலைவர்களுக்கும் அவர்களின் பணியாளர்களுக்கும் அனுபவங்களையும் மற்றும் அது குறித்த பட்டறைகளையும் வழங்க இருக்கின்றது.
  • ஆச்சென், சிகாகோ, சிங்கப்பூர், வெனிஸ் மற்றும் பெய்ஜிங் போன்ற உலகெங்கிலும் உள்ள இதுபோன்ற ஐந்து டிஜிட்டல் திறன் மையங்களுக்கு மட்டுமே மெக்கின்சி ஆதரவளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்