இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் திறன் மையத்தை (Digital Capability Centre - DCC) அமைக்க இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய நிறுவனமானது (National Institution for Transforming India - NITI Aayog) மெக்கின்சி & நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் காண்பிக்கும். இது வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு சோதனைத் தளத்தை வழங்கும்.
DCC என்பது ஒரு தனித்துவமான டிஜிட்டல் உற்பத்திக் கற்றல் மையமாகும்.
இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் தலைவர்களுக்கும் அவர்களின் பணியாளர்களுக்கும் அனுபவங்களையும் மற்றும் அது குறித்த பட்டறைகளையும் வழங்க இருக்கின்றது.
ஆச்சென், சிகாகோ, சிங்கப்பூர், வெனிஸ் மற்றும் பெய்ஜிங் போன்ற உலகெங்கிலும் உள்ள இதுபோன்ற ஐந்து டிஜிட்டல் திறன் மையங்களுக்கு மட்டுமே மெக்கின்சி ஆதரவளிக்கின்றது.