TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது நிலக்கரி - வளிமயமாக்கல் உரத்தொழிற்சாலை

September 23 , 2018 2260 days 674 0
  • இந்தியாவின் முதலாவது ‘Pet Coke’ எனப்படும் கரி கலப்புடன் கூடிய நிலக்கரி - வளிமயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட உரத் தொழிற்சாலையின் தொடக்கப் பணியை பிரதம அமைச்சர் (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார். இந்த உரத் தொழிற்சாலை ஒடிஸாவின் தால்ச்சரில் அமைக்கப்படவிருக்கிறது.
  • நிலக்கரி வளிமயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட உரத் தொழிற்சாலையானது தால்ச்சர் உரங்கள் நிறுவனத்தால் மேம்படுத்தப்படுகிறது.
  • இப்பணிகள் முடிவடைந்தால், இந்த தொழிற்சாலையானது ஆண்டுக்கு27 மில்லியன் மெட்ரிக் டன்கள் (MMTPA - Million Metric Tonne Per Annum) வேம்பு பூசப்பட்ட யூரியா கட்டிகளை உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.
  • வேம்பு பூசப்பட்ட யூரியாவானது மண்ணில் ஏற்படும் நைட்ரஜன் அரிப்பைக் குறைக்கிறது. மேலும் யூரியாவை விவசாயப் பயன்பாட்டில் இருந்து வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை கண்காணிக்கிறது.
  • இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற மாசுபடுத்திகள் யூரியா மற்றும் இதர துணைப் பொருட்களை தயாரிப்பதற்காக மறுசுழற்சி செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்