TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம்

October 13 , 2020 1562 days 809 0
  • உலகப் பொருளாதார மன்றம் மற்றும் கைடன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் ஏஎம்எச்யூபி (AMHUB) என்பதனை ஏற்படுத்தவுள்ளன.
  • ஏம்எம்எச்யூபி - AMHUB என்பது மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையம் (AMHUB - Advanced Manufacturing hub) என்பதனைக் குறிக்கின்றது. இது நாட்டில் தொடங்கப்பட்டு உள்ள இதே வகையைச் சேர்ந்த முன்முயற்சிகளில் முதலாவதாகும்.
  • கைடன்ஸ் நிறுவனம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாகும்.
  • AMHUB ஆனது சூரிய ஒளி ஆற்றல், மின்னணு, மின்சாரப் போக்குவரத்து மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் தமிழ்நாடு மாநிலத்திற்கு உதவ இருக்கின்றது.
  • இது 4வது தொழிற் புரட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள பிராந்திய வாய்ப்புகளை அடையாளம் காணுவதன் மூலம் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை வலுப்படுத்த உதவ இருக்கின்றது.
  • செயற்கை நுண்ணறிவு, இணையப் பொருட்கள், மேகக் கணினி போன்றவை 4வது தொழிற்துறைப் புரட்சி வாய்ப்புகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்