இந்தியாவின் முதல் அதி உயர் திசைவேக விரிவாக்க குழலமைப்பு பரிசோதனை மையம்
February 13 , 2024 286 days 339 0
கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது (IITK), இந்தியாவின் முதல் அதி உயர் திசைவேக விரிவாக்க குழலமைப்புப் பரிசோதனை மையத்தினை மிகவும் வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்துள்ளது.
இந்த மையமானது, மீயொலிவேகம் சார்ந்தச் சூழ்நிலைகளை உருவாக்கி, 3 முதல் 10 கிமீ/வி. வரையிலான வேகத்தை உருவாக்கும் திறன் கொண்டது.
வளிமண்டலத்தில் விமானங்கள் நுழைதல், குறுங்கோள்களின் நுழைவு, ஸ்க்ராம்ஜெட் விமானங்கள் மற்றும் உந்துவிசை ஏவுகணைகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இது முக்கியமானதாகும்.
S2 எனப்படும் இந்த அமைப்பு ஆனது "ஜிகர்தண்டா" என்று அழைக்கப் படுகின்றது.