TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அலை ஆற்றலூட்டப்பட்ட வழிகாட்டு மிதவை

November 16 , 2017 2566 days 981 0
  • சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழிற்நுட்ப நிறுவனத்தால் (National Institute of Ocean Technology-NIOT) இந்தியாவின் முதல் அலை ஆற்றலூட்டப்பட்ட வழிகாட்டு மிதவை (Wave - Powered Navigational buoy) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம் (International Energy Agency) மற்றும் பெருங்கடல் ஆற்றல் திட்ட அமைப்பின் (Ocean Energy Systems)    நிர்வாகிகள் குழு சந்திப்பின் போது இந்த மிதவை அறிமுகப்படுத்தப்பட்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் சென்னையிலுள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இது கடல்வழி பயணங்களின் போது கப்பல்கள் நங்கூரமிட சாத்தியமான பகுதிகளை குறிப்பதற்கும், பவளங்கள் அல்லது பிற அபாயங்கள் உள்ள இடத்தை குறித்திடவும் பயன்படுத்தப்படும் ஓர் நங்கூரமிடப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட வழிகாட்டு மிதவையாகும்.
  • பிற வழக்கமான மிதவைகள் சூரிய மின் ஆற்றலை தங்கள் செயல்பாட்டிற்காகப் பயன்படுத்தும். ஆனால் இம்மிதவைகள் அலைகளினால் உண்டாகும் ஆற்றலை தன் இயக்கத்திற்காக மின்கலன்களில் (Battery) சேகரித்து வைத்து பின்  பயன்படுத்தும். இதன் மூலம் இவை கப்பல்களுக்கு வழிகாட்டும்.
  • துறைமுகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் வரையறுக்கப்பட்ட கடல்பாதை வழி கப்பல் செல்வதற்கு வழிகாட்டிட இம்மிதவைகள் உதவும்.
  • மேலும் இம்மிதவைகளால் துறைமுக அதிகாரிகளுக்குத் தேவைப்படும்   தகவல்களான கடல்பரப்பில்  வீசும் காற்றின் வேகம்,  காற்றின் திசை மற்றும் பிற அம்சங்களையும் பதிவு செய்ய இயலும்.
  IEA – OES Meeting
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம் – பெருங்கடல் ஆற்றல் அமைப்பு.
  • International Energy Agency – Ocean Energy System.
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம் – பெருங்கடல் ஆற்றல் அமைப்பின் 33-வது நிர்வாகிகள் குழுவின் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
  • பெருங்கடல் ஆற்றல் அமைப்புத் தொழிற்நுட்ப கூட்டுத் திட்டமானது (Ocean Energy Systems Technology Collaboration Programme) பல்வேறு நாடுகளுக்கிடையேயான  ஓர் கூட்டிணைவாகும்.
  • இத்திட்டமானது சர்வதேச ஆற்றல் நிறுவனத்தால் தோற்றுவிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் செயல்படுகின்றது.
  • 2017, ஏப்ரலில் இந்தியா இந்த மன்றத்தில் உறுப்பினரானது.
  • இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள  பெருங்கடல் ஆற்றல் சார்ந்த   மேம்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு குழுவையும் , தகவல்கள் மற்றும்  தொழிற்நுட்பங்களையும் இந்தியாவால் அணுகிட இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்