உலக ரேடியோ தினமான பிப்ரவரி 13 அன்று “ரேடியோ உமாங்க்“ எனும் இந்தியாவின் முதல் ஆன்லைன் ரேடியோ நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
அமைதி, மனித நேயம் மற்றும் நம்பிக்கை (Peace, humanity and hope) ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆன்லைன் ரேடியோ நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
இணைய பண்பலை திருத்தம் (web streaming) அல்லது செயலி பதிவிறக்கம் மூலம் வானொலி கேட்பாளர்கள் இந்த ஆன்லைன் ரேடியோவை கேட்க (tune) முடியும்.
24 மணிநேரம் நிகழ்ச்சிகளுடைய இந்த ஆன்லைன் ரேடியோவிற்கு இந்தியாவின் இந்தி மொழி வழங்கும் பிராந்தியங்களிலும் உலகின் 60 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.