இந்தியாவின் முதல் ஆளில்லா ராணுவ பீரங்கி – முன்ட்ரா (Muntra)
July 31 , 2017 2672 days 988 0
அணு ஆயுதம் மற்றும் உயிரி ஆயுத அச்சுறுத்தல்கள் இருக்கும் பகுதிகளில் இயங்கக்கூடிய ஆளில்லா ராணுவ பீரங்கிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation - DRDO) உருவாக்கியுள்ளது.
கண்காணிப்பு, கண்ணிவெடிகளை கண்டறிவது , ராணுவ உளவு போன்ற மூன்று செயல்களுக்கு மூன்று வகையான பீரங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன . முன்ட்ரா/ MUNTRA என்று பெயரிடப்பட்டு இருக்கும் சொல்லின் விரிவாக்கம்‘ஆளில்லா ஆய்வுத் திட்டம்’/‘Mission UNmanned TRAcked’ என்பதாகும்.
ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் துறையில் (Mahajan field firing range ) இந்த வகை டாங்கிகள் சோதிக்கப்பட்டன. முன்ட்ரா டாங்கிகளில் கண்காணிப்பு ரேடார்கள்பொருத்தப்பட்டுள்ளன. முன்ட்ரா பீரங்கிகளில் இருக்கும்லேசர் தொழிநுட்பம் கொண்ட வரம்பினை கண்டறியும் நிழற்படக் கருவி மூலமாக15 கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் இலக்குகளை உளவுபார்க்க முடியும் .
முன்ட்ரா பீரங்கிகள் சென்னையில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஆய்வகத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டன .
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னையில் நடந்த கண்காட்சியில் இரண்டு முன்ட்ரா வகை பீரங்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.