TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் இரவு வான்வெளிப் பூங்கா

January 20 , 2024 181 days 542 0
  • மகாராஷ்டிராவில் உள்ள பென்ச் புலிகள் வளங்காப்பகம் (PTR) ஆனது இந்தியாவின் முதல் இரவு வான்வெளிப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரவு நேர வானத்தைப் பாதுகாப்பதற்கும், ஒளி மாசுபாட்டைத் தடுப்பதற்காகவும் ஆசியாவில் அமைக்கப்பட்ட ஐந்தாவது பூங்காவான இது வானியல் ஆர்வலர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
  • ஓர் இரவு வான் பாதுகாப்பு அமைப்பு என்பது செயற்கை ஒளி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துகின்ற, ஒரு பூங்கா அல்லது ஆய்வகத்தினைச் சுற்றியுள்ள பகுதியாகும்.
  • இந்த இரவு வான்வெளி நடவடிக்கையின் முக்கிய நோக்கம் வானவியல் ஆய்வை நன்கு மேம்படுத்துவதாகும்.
  • பென்ச் புலிகள் வளங்காப்பகம் அல்லது பென்ச் தேசியப் பூங்கா என்பது இந்தியாவின் முதன்மையான புலிகள் வளங்காப்பகங்களில் ஒன்றாகும்.
  • மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் பரவி அமைந்த முதல் வளங்காப்பகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்