வெவ்வேறு அமைச்சகம் மற்றும் தொழிற்சாலை கூட்டுனர்களுடன் சேர்ந்து நிதி ஆயோக், “இயக்கம் : உலகளாவிய இயக்க உச்சி மாநாடு” (MOVIE : Global Mobility Summit”) என்ற ஒன்றை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவுள்ளது.
இந்த உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறும். இது பிரதம மந்திரியால் தொடங்கி வைக்கப்படும்.
இது வாகனங்களை மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்தல் மற்றும் வேலை வாய்ப்பினை அதிகரித்தல் போன்ற இந்தியாவின் இலக்குகளை வழி நடத்த உதவும். இவ்வாறு தூய்மையான ஆற்றலைக் கொண்ட பொருளாதாரம் நோக்கிய இந்தியாவின் மாற்றத்தினை துரிதப்படுத்த முடியும்.