குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை 'உலக பாரம்பரிய நகரம்' என யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த பெயரைப் பெறும் முதல் நகரம் இதுவாகும்.
ஆசிய அளவில் இந்த அங்கீகாரத்தைப் பெறும் மூன்றாவது நகரம் இதுவாகும்.
யுனெஸ்கோ அமைப்பு இந்நகரத்தை ‘உலக பாரம்பரிய நகரம்’ என ஜூலை மாதம் 8-ஆம் தேதியன்று போலந்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அறிவித்தது.
உலக பாரம்பரியச் சின்னங்ககளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 36 கலாச்சார சின்னங்கள் உள்ளன - 28 கலாச்சார சின்னங்கள் , 7 இயற்கைச் சின்னங்கள் , 1 கலாச்சார மற்றும் இயற்கைச் சின்னம்.
15 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, அகமதாபாத் நகரம், சபர்மதி ஆற்றின் கிழக்கு கரையில் வளமான கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது.
அகமதாபாத் நகரில் மொத்தம் 28 கலாசாரச் சின்னங்கள் இந்தியாவின் மத்தியத் தொல்லியல் துறையால் (Archaeological Survey of India - ASI) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
யுனெஸ்கோ தலைமை இயக்குனர் : இரினா பொகோவா (2009- தற்போது வரை )