TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஊடாடும் கடன் அட்டை

November 17 , 2018 2202 days 691 0
  • இண்டஸ்இண்ட் வங்கியானது இண்டஸ்இண்ட் பேங்க் நெக்ஸ்ட் (IndusInd Bank Nexxt) என்றழைக்கப்படும் இந்தியாவின் முதல் பொத்தான்களுடன் கூடிய ஊடாடும் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி எப்படி பணம் செலுத்துவது என்பதில் பல விருப்பத் தேர்வுகளை அளிக்கிறது.
  • இந்த அட்டையானது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கை தலைமையகமாகக் கொண்ட டைனமிக் இன்க் என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது விற்பனை செய்யும் இடத்தின் (POS - Point of Sale) முனையத்தில் மூன்று பணவழங்கீட்டு விருப்பத் தேர்வுகளை நெகிழ்வுத் தன்மையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
    • கடன்
    • பரிவர்த்தனைகளை 4 கால அளவில் எளிய மாதத் தவணைகளாக மாற்றும் வசதி (6,12, 18, 24 மாதங்கள்)
    • வெகுமதி புள்ளிகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துதல்
  • போன்றவற்றை வெறுமனே அட்டையில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் தேர்வு செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்