மத்திய உள்துறை அமைச்சகமானது கடலோரக் காவலுக்கான தேசிய கல்விச்சாலையை (National Academy of Coastal Policing-NACP) தொடங்குவதற்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
இது திறம் வாய்ந்த முறையில் இந்தியாவின் கடற்கரைகளைப் பாதுகாப்பதில் கடலோரக் காவல் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நாட்டின் முதல் தேசிய கடலோரக் காவல் கல்விச்சாலை ஆகும்.
இது குஜராத் மாநிலத்தின் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் துவங்கும்.
குஜராத்தில் உள்ள கடலோரப் பகுதியான தேவ்பூமி துவாரகா மாவட்டத்தின் ஒக்ஹாவில் (Okha) அமைந்துள்ள குஜராத் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் (Gujarat's Fisheries Research Centre) இந்த கல்விச்சாலை அமையவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிந்தனையாளர் குழு, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Bureau of Police Research and Development- BPRD) இந்த கல்விச்சாலையின் நிறுவல் மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும்.
கடலோரக் காவலுக்காக முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகு தேசிய கல்விச்சாலையானது பாதுகாப்புப் படைகள் மற்றும் பாரா மிலிட்டரி படையின் அணிகளால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும்.
கடலோர மாநிலங்களின் கடற் பாதுகாப்பு படைகளின் (Marine forces) திறன்களை கூர்மைப்படுத்துவதற்காக இந்த கல்விச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படையானது (Border Security Force - BSF) இந்த கல்விச்சாலை வளாகத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.
இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த திறன் பயிற்றுவிப்பாளர்கள் (Faculty) இந்த கல்விச்சாலையில் பணிபுரிவர்.
எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவற்படை ஆகியவை இணைந்து இந்த கல்விச்சாலையை நடத்தும்.