இந்தியாவின் முதல் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் தானியங்கி எந்திரம்
March 2 , 2024 271 days 328 0
இந்தியாவின் முதல் கழிவுநீர் தொட்டி/சாக்கடை சுத்தம் செய்யும் தானியங்கி எந்திரமானது, மனிதர்களால் நேரடியாக சுத்தம் செய்யப்படும் நடைமுறையை ஒழிப்பதற்கான ஒரு தீர்வாக அமைந்து ஸ்வச்சதா அபியானை வலுப்படுத்துகிறது.
ஹோமோசெப் ஆட்டம் என்ற இந்தத் தொழில்நுட்பம் ஆனது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வணிக காப்பு மையத்தின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 நகரங்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் விரிவான எந்திர வெட்டுத் தகடு சுத்தம் செய்தல், திடக்கழிவுகளை நீக்குதல், உறிஞ்சி வெளியேற்றுதல் மற்றும் ஒரு சாதனத்தில் சேமித்தல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
இது சுத்திகரிப்பிற்காக பல்வேறு சாதனங்களின் பயன்பாட்டுச் செலவைக் குறைக்கிறது மற்றும் சாக்கடைகளில் தானியங்கி எந்திரச் சுத்திகரிப்பினை மேம்படுத்துகிறது.