TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் காகிதம் இல்லா தேர்தல் – மத்தியப் பிரதேசம்

September 30 , 2024 54 days 117 0
  • முதன்முறையாக, மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் ஆனது போபாலில் உள்ள பஞ்சாயத்து இடைத்தேர்தலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் காகிதமில்லா வாக்களிப்பை வெற்றிகரமாக நடத்தியது.
  • பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எளிமையான, சுமூகமான மற்றும் வெளிப்படையான வாக்குப்பதிவை நடத்தும் ஒரு நோக்கத்திற்காக காகிதம் இல்லா வாக்குச் சாவடிகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளன.
  • இந்த காகிதமில்லா வாக்குப் பதிவு செயல்பாட்டில், துல்லியமான அடையாள சரி பார்ப்பு மற்றும் வாக்குப் பதிவுகளை உறுதி செய்வதற்காக வேண்டி வாக்காளர்களின் கையொப்பங்கள் மற்றும் கட்டைவிரல் பதிவுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப் படுகின்றன.
  • வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் வாக்குப்பதிவு கணக்கீடு ஆகியவையும் இயங்கலை வழியாகவே மேற்கொள்ளப்பட்டது.
  • வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களுக்கும் வாக்குச் சாவடி முகவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக் கணக்குகள் அனுப்பப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்