திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரூரில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தின் மறுசீரமைப்பு மற்றும் வளங்காப்பு பணிகள் தொடங்கப்பட்டது.
முதலாவது திரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் கடன் சங்கமானது, விவசாயிகளுக்காக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
அந்தப் பழையக் கட்டிடத்தினை ஒட்டி ஒரு சிறிய அமர்வு அரங்கம் மற்றும் கூட்டுறவு இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப் படவுள்ளது.