TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தனியார் ஏவுகணை தொழிற்சாலை

August 5 , 2017 2716 days 1060 0
  • இந்தியாவில் ஏவுகணை துணைப்பாகங்களை உற்பத்தி செய்யும் முதல் தனியார் துறை தொழிற்சாலையானது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (‘Make in India’) திட்டத்தின்படி தொடங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை , பாதுகாப்புத் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்த உதவும்.
  • தொழிற்சாலையின் பங்குதாரர்கள்:
    • கல்யாணி குழுமம் – தனியார் குழுமம் – 51 % பங்குதாரர்
    • Rafael Advanced Defense Systems Ltd. - இஸ்ரேலிய பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் – 49 % பங்குதாரர்
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக , கல்யாணி ரபேல் மேம்பட்ட அமைப்புகள் (Kalyani Rafael Advanced Systems, KRAS) தொழிற்சாலை, இஸ்ரேலின் இஸ்பைக் (Spike) எனப்படும் பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை (Anti-Tank Guided Missile, ATGM) தயாரிக்க இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்