உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இராஜாஜி தேசியப் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள இராஜாஜி இரகாதி உயிர்க்கோளக் காப்பகம் (RRB) எனப்படும் இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளக் காப்பகம் ஆனது இரண்டு நபர்களால் உருவாக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய வனவிலங்குச் சரணாலயங்களான இராஜாஜி, மோட்டிச்சூர் மற்றும் சில்லா ஆகியவை இணைக்கப் பட்டு இராஜாஜி தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் புனேவுக்கு அருகிலுள்ள சஹ்யாத்ரி புலிகள் வளங்காப்பகத்தின் இடையக மண்டலத்தில் கொய்னா நதிக்கு மேலே - மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில் இரண்டாவது உயிர்க்கோளத்தினை உருவாக்கவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.