திருச்சி மாநகராட்சியானது விரைவில் இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகமான ‘லிட்டில் ஃப்ரீ லைப்ரரியை’ புத்தூர் அலுவலர்கள் குடியிருப்பில் துவங்க இருக்கின்றது.
இது வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் உள்ளூர் மக்களிடையே புத்தகங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும்.
திருச்சி மாநகராட்சியானது ஏற்கனவே ‘மகிழ்ச்சியின் சுவர்‘ என்ற திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்ற முன்னெடுப்புகளை செயல்படுத்தி இருக்கின்றது.