TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்

October 17 , 2022 644 days 1257 0
  • அழிந்து வரும் ஒரு உயிரினமான தேவாங்குகளுக்கான இந்தியாவின் முதல் சரணாலயத்தினை நிறுவ உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ‘கடவூர் தேவாங்கு சரணாலயம்’ ஆனது அமைக்கப்பட உள்ளது.
  • இந்தச் சரணாலயமானது, இந்த மாவட்டங்களில் உள்ள வேடசந்தூர், திண்டுக்கல் கிழக்கு மற்றும் நத்தம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கும்.
  • தேவாங்கு என்பது ஒரு சிறிய மற்றும் இரவு நேர விலங்கினமாகும்.
  • இது பொதுவாக தென்னிந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலப் புதர் மற்றும் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது.
  • இவை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மரங்களில் வாழ்ந்து செலவிடுவதால் இவை மர வாழ் விலங்குகளாகும்.
  • IUCN அமைப்பானது, இவற்றை ‘அழியும் நிலையில் உள்ள உயிரினங்களாகப்’ பட்டியல் இட்டுள்ளது.
  • அதே வேளையில், 1972 ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் அவற்றிற்கு ஒரு மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பானது வழங்கப் படுகிறது.
  • முன்னதாக, பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு வளங்காப்பகம், விழுப்புரத்தில் உள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் மற்றும் திருப்பூரில் நஞ்ச ராயன் குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள அகஸ்திய மலையில் மாநிலத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகம் ஆகியவற்றைத் தமிழக அரசு அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்