இந்தியாவின் முதல் நடமாடும் (mobile) உணவு பரிசோதனை ஆய்வகத்தை கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் துவக்கி வைத்துள்ளார்.
இந்த ஆய்வகத்திற்கு முழு நிதியுதவியையும் வழங்கியுள்ள மத்திய அரசே, இதன் அடுத்த ஐந்தாண்டு கால பராமரிப்பு செலவையும் ஏற்க உள்ளது.
ஓர் பேருந்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகமானது கோவா மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பயண இடங்களில் உணவு மாதிரிகளின் தரத்தையும், தண்ணீரின் சுகாதார அளவையும் சோதனை செய்யும்.