TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நிலக்கரி வாயுவாக்க ஆலை

July 6 , 2024 12 days 117 0
  • ஜார்க்கண்டின் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கஸ்தா நிலக்கரித் தொகுதியில் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கத்திற்கான (UCG) இந்தியாவின் முதல் ஆலை நிறுவப்பட உள்ளது.
  • நிலக்கரி வணிகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக நிலக்கரியை கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட பயனுள்ள வாயுக்களாக மாற்றுவதற்காக வேண்டி அது உள்-நிலை வாயுவாக்கத்தைப் பயன்படுத்த உள்ளது.
  • இந்த வாயுக்கள் செயற்கையான இயற்கை வாயுவின் உருவாக்கம் மற்றும் வெடி பொருட்கள், உரங்கள் மற்றும் எரிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயன மூலப்பொருட்களின் வேதியியல் கூறு போன்ற பல தொழில்துறை செயல் முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்தியாவின் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு ஆனது 2023 ஆம் ஆண்டில் 8% அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது தேவையின் வளர்ச்சிக்கும் ஒரு காரணமாக உள்ளது.
  • மொத்த நுகர்வில் அதன் பங்கு 89% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்