TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் வணிக ஆளில்லா விமானம் - ஐரோவ் துனா

September 15 , 2018 2135 days 625 0
  • கொச்சியை மையமாகக் கொண்ட தொடக்க நிலை நிறுவனமான IROV டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (EyeROV) என்ற நிறுவனமானது நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா விமானத்தை வணிக ரீதியில் களமிறக்கியுள்ளது.
  • DRDO-வின் கடற்படை மற்றும் கடற்பரப்பியல் ஆய்வகத்திற்கு (NPOL - Naval Physical and Oceanographic Laboratory) முதல் வாகனத்தை IROV ஆனது ஒப்படைத்தது.
  • ஐரோவ் துனா ஆனது செயல்திறன்மிக்க நுண்ணிய தொலை தூரத்திலிருந்து இயங்கக்கூடிய அல்லது நீருக்கடியில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானமாகும். இது உலகளாவிய தரத்திற்கு இணையானதாகவும், நீருக்கடியில் கடுமையான மற்றும் சிக்கலான பணிகளை மேற்கொள்ளும் செயல்பாட்டுத் திறனையுடையதாகவும் உள்ளது.
  • இந்த விமானமானது நீருக்கடியில் உள்ள கப்பல் பாகங்கள், மீன் பண்ணைகள், அணைகள், துறைமுகக் கட்டமைப்புகள் மற்றும் பாலத்தின் அடித்தளங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்