இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாவைக் குஜராத் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இது துவாரகா நகரின் கடற்கரையின் அருகே அமைந்த பெட் துவாரகா என்ற சிறிய தீவினைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களை காண இது உதவும்.
இத்திட்டம் ஆனது டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கான சுற்றுலா திட்டத்தினை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள், இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடல்வாழ் உயிரினங்களை கண்டு களிப்பதற்காக ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் 100 மீட்டர் ஆழம் வரை கொண்டு செல்லப்படுவர்.
புராண நூல்களின் கூற்றுப்படி, கிருஷ்ண பகவானால் உருவாக்கப்பட்ட துவாரகா நகரம் இங்கு நீரில் மூழ்கி இருப்பதாக நம்பப் படுகிறது.