TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நெடுஞ்சாலை திறன் கையேடு

February 15 , 2018 2477 days 786 0
  • சாலை விரிவாக்கம் தொடர்பாக சாலைப் பொறியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது இந்தியாவின் முதல் நெடுஞ்சாலைத் திறன் கையேட்டை (Highway capacity Manual - HCM) வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கையேடானது Indo-HCM என்றழைக்கப்படுகின்றது.
  • பல்வேறு வகைச் சாலைகளின் போக்குவரத்துத் தன்மை மீதான நாடு தழுவிய விரிவான ஆய்வின் அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் CSIR (Council of Scientific and Industrial Research ) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தால் (CRRI-Central Road Research Institute) இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்