TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பத்திரிக்கையின் 238-வது ஆண்டு விழா

January 31 , 2018 2488 days 2107 0
  • பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்ட குணம் மிக்க ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஹிக்கிஸ் தினத்தை கொண்டாடினர்.
  • இது ஜனவரி 29, 1780-ல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட (தொடங்கப்பட்ட) தி பெங்கால் கெசட் என்ற இந்தியாவின் முதல் செய்தித்தாளின் 238-வது ஆண்டு நிறைவாகும்.
  • ஹிக்கியின் பெங்கால் கெசட் (அசல் கல்கத்தா ஜெனரல் அட்வர்டைசர்) என்பது பிரிட்டிஷ் இந்தியாவின் அன்றைய தலைநகரான கொல்கத்தாவில் (அப்போது கல்கத்தா) வெளியிடப்பட்ட ஒரு ஆங்கில மொழி வார இதழ் ஆகும். இது ஆசியாவில் பிரசுரிக்கப்பட்ட முதல் செய்தித்தாளாகும்.
  • தன்னுடைய சமகாலத்தில், வாரன் ஹேங்டிஸ்-ன் நிர்வாகத்தை கடுமையாக  விமர்சித்த முதல் செய்தித்தாள் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்