மெய்நிகர் நாணயங்களின் (virtual currencies) பரிவர்த்தனைகளுக்காக துபாயைச் சேர்ந்த “புளுட்டோ எக்ஸ்சேஞ்ச்“ எனும் நிறுவனம் இந்தியாவின் முதல் பிட்காயின் (எண்ம நாணயம்) வர்த்தக செயலியை (Trading App) வெளியிட்டு உள்ளது.
பணப்பை வசதியின் அடிப்படையிலான இந்த இந்தியாவிற்கான முதல் பிட்காயின் செயலியின் மூலம் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி பிட்காயின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இது இந்திய சந்தைகளுக்குக்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துதல், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் (Remittance), இரு வணிக நிறுவனங்களுக்கிடையிலான வர்த்தகம், விநியோக சங்கிலிகளின் நிதியளிப்பு, சொத்து மேலாண்மை, வர்த்தகம் போன்றவை உட்பட பல்வேறு பரிவர்த்தனை நடவடிக்கைகளை இச்செயலி மூலம் மேற்கொள்ள இயலும்.
பிட்காயின்கள் ஓர் சங்கேத இணையப் பணமாகும். (Crypto Currency).
கட்டணச் செலுத்து அமைப்பாக (Payment System) பயன்படும் இவை உலகின் முதல் மையப்படுத்தப்படாத/பரவலாக்கப்பட்ட (decentralised) டிஜிட்டல் பணமாகும்.
உலகில் பிட்காயின் நாணயமுறையை கட்டுப்படுத்த எந்த மத்திய வங்கியும், நிர்வாக முறையும் இல்லை. இரகசிய குறியாக்கத்தின் (Crypography) உதவியோடு இதன் அனைத்து பரிவர்த்தனை நடவடிக்கைகளும் இருமுனை பயன்பாட்டாளர்களின் (Peer to Peer) வழியே மேற்கொள்ளப்படுகின்றது.