TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பிராந்திய இரயில் சேவை

October 21 , 2023 438 days 521 0
  • RapidX எனப்படும் இந்தியாவின் முதல் பிராந்திய இரயில் சேவையானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (RRTS) முன்னுரிமைப் பிரிவின் செயல்பாடுகள் துஹாய் மற்றும் சாஹிபாபாத் இடையே (17-கிலோ மீட்டர் தொலைவு) தொடங்கப்பட்டது.
  • இதற்கு நமோ பாரத் எனப் பெயரிடப் பட்டது.
  • டெல்லி-மீரட் வழித்தடத்தின் மொத்த நீளம் ஆனது 82 கிலோமீட்டர் ஆகும் என்ற நிலையில் இந்த இரயில் சேவை மூலம் இதனை ஒரு மணி நேரத்தில் கடந்துவிட முடியும்.
  • RapidX இரயில் மெட்ரோ இரயில்களைப் போலவே இருக்கும், ஆனால் NCRTC பகிர்ந்துள்ள ஆவணத்தின்படி, RRTS மெட்ரோ இரயிலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
  • RRTS இரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள நிலையில் இது இந்தியாவின் விரைவான நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்பாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்