TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெட்டக வடிவ வாடகை வாகனச் சேவை

May 13 , 2023 434 days 272 0
  • இந்தியா தனது முதல் பெட்டக வடிவ வாடகை வாகன (மின்சாரத்தில் இயங்கும் ஓட்டுநரில்லா வாகனம்) சேவையினை உத்தரப் பிரதேசத்தின் ஜேவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் மற்றும் ஃபிலிம் சிட்டி இடையே இயக்க உள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் விரைவான, பெட்டக வடிவ வாடகை வாகனச் சேவை என்பது மிகவும் மேம்பட்ட போக்குவரத்து முறைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.
  • அவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பல்வேறு பயணிகளைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள தானியங்கி மகிழுந்துகள் ஆகும்.
  • இவை ஒரு குறிப்பிட்ட பாதை வழியே மின்சாரம் மூலம் இயக்கப் படுகிறது.
  • இவற்றிற்கான வழித்தடங்கள் என்பவை பொதுவாக சாலைப் போக்குவரத்தைத் தவிர்க்கும் விதமாக, கம்பிகளில் தனித்தனியாக உருவாக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்