TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பேரழிவுகளுக்கான கடலோர தானியங்கி எச்சரிக்கை அமைப்பு

January 20 , 2018 2531 days 855 0
  • இந்தியாவின் முதல் தானியங்கி முன்கூட்டிய எச்சரிக்கை பரப்புதல் அமைப்பு, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒடிசாவில் நிறுவப்பட இருக்கிறது.
  • முன் கூட்டிய எச்சரிக்கை பரப்புதல் அமைப்பு, நாட்டில் முதன் முறையாக தானியங்கி முறையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் பரப்பும் அமைப்பாகும்.
  • இந்த அமைப்பு ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரப்பாரா மற்றும் பூரி ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்டு நேரடியாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகத்தால் (Special Relief Commissioner) கட்டுப்படுத்தப்படும்.
  • இந்த திட்டம் உலக வங்கியின் உதவியுடன் தேசிய சூறாவளி ஆபத்து தணிக்கும் திட்டத்தின் (National Cyclone Risk Mitigation Project) கீழ் நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்