NSE குறியீடுகள் நிறுவனமானது, இந்தியாவின் முதல் மாநகராட்சிப் பத்திரக் குறியீட்டினை அறிமுகப் படுத்தியுள்ளது.
நிஃப்டி இந்தியா மாநகராட்சிப் பத்திரக் குறியீடானது, இந்திய மாநகராட்சிக் கழகங்களால் வழங்கப்பட்ட மாநகராட்சிப் பத்திரங்களின் செயல்திறனை அவற்றின் நிறைவுக் காலம் மற்றும் முதலீட்டுத் தரக் கடன் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் கண்காணிக்கிறது.
இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியத்தின் பத்திர வெளியீடு மற்றும் 2015 ஆம் ஆண்டு மாநகராட்சிக் கடன் பத்திரங்கள் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் படி வழங்கப் பட்ட மாநகராட்சிக் கடன் பத்திரங்கள் இந்தக் குறியீட்டில் அடங்கும்.
தற்போது, AA தர வரிசைப் பிரிவில் தர மதிப்பீடு பெற்ற 10 பத்திர வழங்கீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட 28 மாநகராட்சிக் கடன் பத்திரங்கள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.