TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மின்னணு பொருட்கள் உற்பத்தி குழுமங்கள்

December 14 , 2017 2409 days 909 0
  • இந்தியாவின் முதல் மின்னணு பொருட்கள் தொழிற்சாலை உற்பத்தி குழுமங்கள் (EMC – Electronic Manufacturing Cluster) ஆந்திரப் பிரதேசத்தில் அமைய உள்ளது. இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டாவில் அமைக்கப்பட உள்ளது.
  • கைபேசி மற்றும் அதன் பயன்பாட்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை வழங்குவதற்காக மின்னணு பொருட்கள் உற்பத்தி குழுமங்கள் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
  • ஆந்திரப் பிரதேசத்தில் இத்தகு நாட்டின் முதல் பிரத்யேக மொபைல் மற்றும் மின்னணு உற்பத்தி குழுமம் அமைப்பதற்காக ஸ்ரீ வெங்கடஸ்வரா தனியார் மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் முனையம் எனும் சிறப்பு குறிக்கோள் வாகனம் (SPV – Special Purpose Vehicle) ஒன்று துவங்கப்பட்டு உள்ளது.
  • இக்குழுமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்