TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மெய்நிகர் நுரையீரல் ஊடுசோதிப்பு வழிகாட்டு அமைப்பு

May 12 , 2018 2393 days 708 0
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் இந்தியாவின் முதல் மெய்நிகர் நுரையீரல் ஊடு சோதிப்பு வழிகாட்டு அமைப்பை (Virtual Bronchoscopy Navigation – VBN) துவங்கியுள்ளது. இந்த வசதியினை நுரையீரலில் சிறிய புற்றுநோய் கட்டி போன்ற பகுதிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் பரிசோதனை மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை வசதிகளை வழங்குவதற்காக அமைத்துள்ளது.
  • மெய்நிகர் நுரையீரல் ஊடுசோதிப்பு வழிகாட்டு அமைப்பானது, எய்ம்ஸில் (All India Institute of Medical Sciences - AIIMS) நுரையீரல் மருத்துவம் மற்றும் தூக்கம் சம்பந்தமான கோளாறுகள் துறையில் நிறுவப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குப் பிறகு இந்த வசதியை சீனா, சிங்கப்பூர் போன்ற ஒரு சில நாடுகளே கொண்டுள்ளன.
  • இந்த VBN அமைப்பானது புரோங்கோ ஸ்கோப்பைப் பயன்படுத்தி அதி துல்லியமான மற்றும் பாதுகாப்பான சிறிய நுரையீரல் புண்களின் மாதிரிகளை நோயாளிகளிடம் இருந்து பெறுவதற்கு உதவுகிறது. மேலும் இந்நடைமுறை நோய்களை சோதனை செய்வதற்கான தெளிவான தன்மையை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்