கியாவர்ஸ் இந்தியாவின் முதல் மெய்நிகர் உலக வங்கி ஆகும்.
உலகளவில் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குச் சேவை வழங்கும் டிஜிட்டல் தீர்வுகள் வழங்குநரான Kiya.ai என்ற நிறுவனம்இதை அறிவித்தது.
அவதார் (மெய்நிகர் மனித உருவம்) அடிப்படையிலான ஊடாடல்கள் மூலம் நிஜ உலக வங்கியை மெய்நிகர் உலக வங்கியுடன் இணைப்பதற்கான நிகழ்வுகளை கியாவர்ஸ் பயன்படுத்துகின்றது.
மெய்நிகர் வழித் தொடர்புகளைச் செயல்படுத்த வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களால் (NBFCs) இது பயன்படுத்தப்படும்.