TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் விண்வெளி குவாண்டம் தகவல்தொடர்பு

March 27 , 2021 1249 days 596 0
  • வெற்றிகரமாக, 300 மீட்டர் தொலைவிற்கு விண்வெளி குவாண்டம் தகவல் தொடர்பினை இஸ்ரோ செயல்விளக்கம் காட்டியுள்ளது.
  • இது இந்தியாவின் இவ்வகையிலான முதல் முயற்சியாகும்.
  • இந்தச் செயல்விளக்கமானது மறைக்கப்பட்ட முதன்மை குவாண்டம் சமிக்ஞைகளைப் பயன்படுத்திய நேரலை காணொளியை உள்ளடக்கியதாகும்.
  • இது குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயற்கைக் கோள் தரவு தகவல் தொடர்பின் நிபந்தனையற்ற பாதுகாப்பிற்கான ஒரு முக்கியச் சாதனையாகும்.
  • சூரிய ஒளியின் நேரடி குறுக்கீடு எதுவும் இல்லாமல் இருப்பதற்காக இந்தச் சோதனை இரவில் மேற்கொள்ளப் பட்டது.
  • செயற்கைக் கோள் சார்ந்த குவாண்டம் தகவல்தொடர்பினை அமைக்கும் இஸ்ரோவின் இலக்கில் இது ஒரு திருப்புமுனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்