டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது (Indian Institute of Technology-IIT) 5G உபகரணங்களின் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தரநிலைப்படுத்தலுக்காக (standardisation) தன்னுடைய IIT வளாகத்தில் மிகப் பெரிய பல்-உள்ளீடு பல்-வெளியீடு (Massive Multiple-Input, Multiple-Output lab- MIMO) ஆய்வகத்தை தோற்றுவித்துள்ளது.
பல்-உள்ளீடு பல்-வெளியீடு ஆய்வகமானது நாட்டின் முதல் 5G ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகமானது தொலைத்தொடர்பிற்கான பாரதி தொழிற்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (Bharti School of Telecommunication Technology and Management) தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகமானது 5G சோதனை மாதிரியிலான முதன்மை நிலையமாக செயல்படும். இந்த ஆய்வகமானது அல்காரிதம்களை (algorithms) சரிபார்க்கவும், சோதனை செய்யவும் பயன்படுத்தப்படும்.
இந்த ஆய்வகமானது முழுமையான 5G முதன்மை நிலையத்தை உருவாக்க உதவும்.