TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் 5G ஆய்வகம்

April 23 , 2018 2279 days 938 0
  • டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது (Indian Institute of Technology-IIT) 5G உபகரணங்களின் தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும்  தரநிலைப்படுத்தலுக்காக (standardisation)  தன்னுடைய IIT வளாகத்தில் மிகப் பெரிய பல்-உள்ளீடு  பல்-வெளியீடு  (Massive Multiple-Input, Multiple-Output lab- MIMO) ஆய்வகத்தை தோற்றுவித்துள்ளது.
  • பல்-உள்ளீடு பல்-வெளியீடு   ஆய்வகமானது நாட்டின் முதல் 5G ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகமானது தொலைத்தொடர்பிற்கான பாரதி  தொழிற்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (Bharti School of Telecommunication Technology and Management)  தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வகமானது 5G சோதனை மாதிரியிலான முதன்மை  நிலையமாக செயல்படும். இந்த ஆய்வகமானது அல்காரிதம்களை (algorithms)  சரிபார்க்கவும், சோதனை செய்யவும் பயன்படுத்தப்படும்.
  • இந்த ஆய்வகமானது முழுமையான 5G  முதன்மை  நிலையத்தை உருவாக்க  உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்